சென்னை: சொந்த வீடு வாங்குவது அனைவரின் கனவு மட்டுமல்லாமல் ஒரு சிறந்த முதலீடும் ஆகும். இந்த கனவை நனவாக்க நீங்கள் ஓடுவதற்குப் பதிலாக, உங்கள் கனவு இல்லம் உங்களுக்கான நிதிச் சுமையைக் குறைத்து, செல்வத்தைப் பெருக்கினால் எப்படி இருக்கும்?
இத்தகைய திட்டத்தைத்தான் ரியல் எஸ்டேட் நிறுவனமான விஜய் ராஜா ஹோம்ஸ் நிறுவனம் தனது ரோமன் தீம் அபார்ட்மென்ட்டான விஆர்எக்ஸ் ஃபிடீ (VRX FETE) மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ.6 லட்சம் செலுத்தி நீங்கள் சொந்த வீட்டை வாங்க ஒரு புதிய வழியை ஏற்படுத்தியுள்ளது.
இப்புதிய திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் செலுத்தும் ரூ.6 லட்சத்தைத் தனித்துவமான வீட்டு முதலீட்டுத் திட்டத்தின் மூலம் பெருக்கி, வீட்டுக் கடன் முடிவடையும் காலத்தின்போது ரூ.19.99 லட்சமாகத் திரும்பப் பெற ஏற்பாடு செய்கிறது.
விஆர்எக்ஸ் ஃபிடீ 50-க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடனும், வசதிகளுடனும் பூந்தமல்லியில் அமைந்துள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில்நுட்ப பூங்காக்கள், சிறந்த மருத்துவமனைகள் போன்ற வசதிகள் சூழ்ந்த பகுதியில் இது அமைந்துள்ளது. பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் மிக அருகில் உள்ளது.
இந்த ரோமன் தீம் அபார்ட்மென்ட்ஸில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற 50-க்கும் மேற்பட்ட வசதிகள், வெளிப்புற நீச்சல் குளம், நன்கு பொருத்தப்பட்ட உடற்பயிற்சி கூடம், பாதுகாப்பான குழந்தைகள் விளையாடும் பகுதி, அமைதியான யோகா மற்றும் தியான இடங்கள், ரூப் டாப் பார்ட்டி ஏரியா போன்ற வசதிகள் வாழ்வைச் சிறப்பாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விஜய் ராஜா ஹோம்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.