பயணம் தொடர்பான சேவைகளை வழங்கி வரும் சர்வதேச நிறுவனமான டிராவல்போர்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2009-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை இதே நிறுவனத்தின் துணை தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
2003-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை கலிலியோ இண்டர்நேஷ்னல் மார்க்கெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
ஏர்லைன் ஐடி சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
எனெட் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
ஏர்லைன் எலெக்ட்ரானிக்ஸ் சேவைத்துறையில் 30 வருடங்கள் அனுபவம் கொண்டவர்.