வார்தா புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகள் கடுமையாக பாதிக்கப் பட்டன. இதனால் தமிழகத்தில் 6,750 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என அசோசேம் தெரிவித்துள்ளது.
கார், கட்டிடங்கள், விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன என்று அசோசேம் பொதுச்செய லாளர் டி.எஸ். ராவத் தெரிவித்தார். சேதம் பற்றிய முழுமையான விவ ரம் உடனடியாக தெரியவில்லை என்றும் இன்னும் சில மாதங்களுக்கு பிறகே தெரியவரும் என்றார்.
சென்னையில் செயல்பட்டுவரும் ஆட்டோமொபைல் நிறுவனங் களான போர்டு, ஹூண்டாய், ரெனால்ட், நிஸான், பிஎம்டபிள்யூ, ராயல் என்பீல்டு, டிவிஎஸ் மோட்டார், அசோக் லேலண்ட், கேட்டர்பில்லர் உள்ளிட்ட நிறுவனங்களில் வார்தா புயல் காரணமாக உற்பத்தி நிறுத் தப்பட்டதால் திங்கள் கிழமை மட்டும் ரூ.1,000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். 600-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தவிர சென்னை யின் முக்கியமான வணிக நிறுவனங் கள் விடுமுறை விடப்பட்டன. இந்த நிறுவனங்களின் சுமார் ரூ 200 கோடி அளவுக்கு ஒரு நாள் வருமானம் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக் கிறது.
நேற்று சென்னையில் இயல்பு நிலை திரும்பினாலும் இன்னும் மின் சாரம் முழுமையாக வழங்கப்பட வில்லை. இதனால் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என ராவத் தெரிவித்தார்.