முகேஷ் அம்பானி | கோப்புப்படம் 
வணிகம்

2047-ல் இந்திய பொருளாதாரம் 40 டிரில்லியன் டாலராக வளர்ச்சி பெற்றிருக்கும்: முகேஷ் அம்பானி

செய்திப்பிரிவு

காந்தி நகர்: எதிர்வரும் 2047 வாக்கில் இந்திய நாட்டின் பொருளாதாரம் 40 டிரில்லியன் டாலராக வளர்ச்சி அடைய வாய்ப்பிருப்பதாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இது தற்போதுள்ள நிலையை காட்டிலும் 13 மடங்கு கூடுதல் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை தொடர்ந்து உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா இப்போது இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“3 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இருந்து இந்திய நாடு வரும் 2047 வாக்கில் 40 டிரில்லியன் டாலர்களை கொண்டுள்ள நாடாக வளர்ச்சி அடையும். அது உலக அளவில் இந்தியாவை டாப் 3 பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாக இருக்க செய்யும்.

அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் சக்திகளாக எரிசக்தி, பயோ எனர்ஜி மற்றும் டிஜிட்டல் துறைகள் இருக்கும். கனவுகள் கொண்டிருந்தால் மட்டுமே முடியாத காரியத்தையும் முடிக்கும் வல்லமையை பெற முடியும்” என பண்டிட் தீன்தயாள் எரிசக்தி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முகேஷ் அம்பானி பேசி இருந்தார்.

SCROLL FOR NEXT