நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தலைமைப் பொது மேலாளராக 27 ஆண்டுகள் பணியாற்றியவர்.
ரிசர்வ் வங்கியின் மின்னணு பரிவர்த்தனை துறை மண்டல பொது மேலாளர், இசிஎஸ், இஎப்டி ஆகிய திட்டங்கள் மற்றும் ரிசர்வ் வங்கியின் மின்னணு முறைக்கான மாற்றங்களில் 5 ஆண்டுகள் பங்காற்றியுள்ளார்.
வங்கிச் சேவை துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இந்திய வங்கிகளின் நிதிச் சேவை பணிகளை மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்.
சம்பல்பூர் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பொருளாதாரப் பட்டமும், முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
ஆதார் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக ‘2012 ஆதார் எக்ஸலன்ஸ்’ விருது உள்ளிட்ட பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.