ராஜீவ் குமார் | கோப்புப்படம் 
வணிகம்

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது: ராஜீவ் குமார் நம்பிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலகம் மந்தநிலையை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், இந்தியா அடுத்த நிதியாண்டில் 6-7 சதவீத பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்கும் என நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் ராஜீவ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது.

அதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. சர்வதேச நிலவரங்களால் நமது வளர்ச்சி எதிர்மறையாக பாதிக்கப்படலாம். எப்படி இருந்தாலும், 2023-24-ம் நிதியாண்டில் நமது பொருளாதாரம் 6 முதல் 7 சதவீதம் வரையிலான வளர்ச்சியை தக்க வைக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் பின்னடைவு காணப்படுகிறது. இது, வரும் மாதங்களில் உலக பொருளாதாரத்தை மந்தநிலைக்கு இட்டுச் செல்லும். பணவீக்கத்தைப் பொறுத்த வரை உச்சகட்டத்தை அடைந்து படிப்படியாக குறையும் என்பதே எனது கணிப்பு. சில்லறைப் பண வீக்கத்தைப் பொறுத்த வரையில் அது 6-7% அளவிலேயே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

உலக வங்கி கடந்த அக்டோபர் 6-ல் வெளியிட்ட மதிப்பீட்டில் அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என தெரிவித்திருந்தது. எனினும், இது, உலக வங்கியின் ஜூன் மாத மதிப்பீட் டைக்காட்டிலும் 1 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT