வணிகம்

கடலோர காற்றாலை: தமிழகம், குஜராத்தில் புதிய முயற்சி

செய்திப்பிரிவு

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் மற்றும் குஜராத் மாநில கடலோரப் பகுதிகளில் காற்றாலை மின்னுற்பத்தி முழுவீச்சை எட்டும் என்று சர்வதேச மாற்று எரிசக்தி குழு தெரிவித்துள்ளது.

இவ்விரு மாநிலங்களில் கடலோரத்தில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மரபு சாரா மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தித்துறை அமைச் சகத்திடம் அளித்துள்ளதாக டிஎன்வி ஜிஎல் என்ற அமைப்பின் பிராந்திய மேலாளர் மாத்தியாஸ் ஸ்டெக் தெரிவித்துள்ளார்.

வர்த்தக ரீதியில் இது சாத்திய மாக 5 ஆண்டுகள் ஆகும் என்று அவர் குறிப்பிட்டார். அடுத்த மூன்று ஆண்டுகளில் சோதனை ரீதியிலான 100 மெகாவாட் மின்னுற்பத்தி திட்டம் குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளப் படும் என்று அவர் குறிப்பிட்டார். கடலோர காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நிதி உதவி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோவின்ட் எனப்படும் இந்த குழு தமிழக கடலோர பகுதியில் வீசும் காற்றின் அளவு குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.

SCROLL FOR NEXT