வணிகம்

900 மெகாவாட் சூரிய மின் திட்டம்: என்எல்சி நிறுவனத்துக்கு ஆர்டர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொதுத்​துறை நிறு​வன​மான என்எல்சி இந்தியா மும்பை பங்​குச்​சந்​தைக்கு சமர்ப்​பித்​துள்​ள அறிக்​கையில் கூறியிருப்​ப​தாவது: எங்​கள் துணை நிறு​வன​மான என்​எல்சி இந்தியா ரெனிவபிள்ஸ் (என்​ஐஆர்​எல்) 900 மெகா​வாட் சூரிய மின்​சக்தி திட்​டத்தை அமைப்​ப​தற்​காக குஜ​ராத் ஊர்ஜா விகாஸ் நிகாம் (ஜி​யு​விஎன்​எல்) நிறு​வனத்​திட​மிருந்து விருப்ப கடிதத்​தைப் பெற்​றுள்​ளது. கட்டண அடிப்​படையி​லான போட்டி ஏல முறை​யில் இத்​திட்​டம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த பசுமை மின்​சக்தி திட்​டம் மூலம் உற்​பத்தி செய்​யப்​படும் மின்​சா​ரத்தை ஜியு​விஎன்​எல் கொள்​முதல் செய்​யும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. என்​ஐஆர்​எல் நிறு​வனம் 2023-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது. என்​எல்சி இந்​தியா நிறு​வனத்​துக்​குச் சொந்​த​மான பசுமை ஆற்​றல் திட்​டங்​கள் மற்​றும் சொத்​துகளைப் பெற்று நிர்​வகிப்​பதே இதன் முக்​கிய நோக்​க​மாகும்.

SCROLL FOR NEXT