கோப்புப்படம் 
வணிகம்

சென்செக்ஸ் 87 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 87 புள்ளிகள் (0.14 சதவீதம்) சரிந்து 61,663 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 36 புள்ளிகள் (0.2 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 18,307 ஆக இருந்தது.

வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 50 புள்ளிகள் உயர்வுடனேயே வர்த்தகம் தொடங்கியது. ஆனால், உடனடியாக சந்தை வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது. காலை 09:55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 108.52 புள்ளிகள் சரிவுடன் 61,642.08 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 26.35 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,317.55 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தையின் குழப்பமான போக்கு, பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை வீழ்ச்சியுடனேயே நிறைவடைந்தன. வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 87.12 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,663.48 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 36.25 புள்ளிகள் சரிந்து 18,307.65 ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃசி ஆகிய பங்குகள் ஏற்றம் அடைந்திருந்தன. மறுமுனையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல்ஸ், நெல்ட்லே இந்தியா, விப்ரோ, ஐடிசி, எம் அண்ட் எம் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

SCROLL FOR NEXT