தொழிலதிபர் விஜய் மல்லையா தனக்கு எதிராக நீதிமன்றம் பிறப் பித்த சம்மனை திரும்பப் பெற வேண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தாமோ தனது நிறுவனமோ, யுனைடெட் பிரூ வரீஸ் நிறுவனத்தில் தங்களுக் குள்ள பங்குகளை டீகோ பிஎல்சி நிறுவனத்துக்கு மாற்றம் செய்யக் கூடாது என்று பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது அதை டிசம்பர் 2-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:
கடந்த அக்டோபர் 20-ம் தேதி பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் உறுப்பு வங்கிகள் தொழிலதிபர் விஜய் மல்லையா மீது தொடர்ந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மல்லையா நேரில் ஆஜராக சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டனர். இதன்படி மல்லையா நேற்று நேரில் ஆஜராகியிருக்க வேண்டும்.
மூன்று நாள்களுக்கு முன்பு வங்கிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக வங்கிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் நாகநந்தா தெரிவித்தார்.
அந்த மனுவில், தொழிலதிபர் விஜய் மல்லையா மற்றும் அவரது நிறுவனம் அளித்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது அவரது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் யுனைடெட் பிரூவரீஸ் லிமி டெட் (யுபிஹெச்எல்) நிறுவனங்கள் பங்குகளை டீகோ பிஎல்சி நிறுவனத்துக்கு மாற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விஷயத்தில் கடன் மீட்பு தீர்ப்பாயம் (டிஆர்டி) ஒரு உத்தரவை பிறப் பித்திருந்தது. அதன்படி ஸ்டாண் டர்டு சார்ட்டர்டு வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த பங்குகளை மாற்றக் கூடாது என உத்தர விட்டிருந்தது. ஆனால் அந்த பங்குகள்தான் டீகோ பிஎல்சி நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ள தாக எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.
கடன் மீட்பு தீர்ப்பாயம் கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில் பங்குகளை டீகோ பிஎல்சி நிறுவனத்துக்கோ அல்லது வேறு நிறுவனத்துக்கோ மாற்றம் செய்யக் கூடாது என ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. யுனைடெட் பிரூவரீஸ் ஹோல்டிங் லிமிடெட் (யுபிஹெச்எல்) நிறுவனத் தில் மல்லையா மற்றும் அவரது மகன் சித்தார்த்துக்கு இருந்த பங்கு கள் ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி யில் அடகு வைக்கப்பட்டிருந்தது.
யுனைடெட் பிரூவரீஸ் பங்கு களை டீகோ பிஎல்சி நிறுவனத்துக்கு விதிகளை மீறி மாற்றம் செய்யக் கூடாது என டிஆர்டி கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி தம்மிடம் அடகு வைக்கப் பட்டிருந்த பங்குகளை டீகோ பிஎல்சி நிறுவனத்துக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வங்கி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
உலகின் மிகப் பெரிய மதுபான உற்பத்தி நிறுவனமான டீகோ பிஎல்சி 2012-ம் ஆண்டு யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது. அப் போது ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிக்கு ஒரு உத்தரவாதத்தை அந்நிறுவனம் அளித்தது. அதன் படி மல்லையாவுக்குச் சொந்த மான வாட்சன் லிமிடெட் நிறுவனத் துக்கு ரூ. 877 கோடிக்கு உத்தர வாதம் அளிப்பதாக உறுதி அளித் திருந்தது. இதற்கு பிரதிபலனாக ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி யில் விஜய் மல்லையா அடகு வைத்துள்ள யுனைடெட் பிரூவரீஸ் நிறுவன பங்குகளை டீகோ பிஎல்சி நிறுவனத்துக்கு மாற்றித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டது. ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கியில் மல்லையா பங்குகளை அடகு வைத்ததே சட்ட விரோதமானது என கூறப்பட்டது.