புதுடெல்லி: செபியின் செயல் இயக்குநர் வி.எஸ். சுந்தரேஷன் கூறியதாவது: மின்னணு தங்க ரசீதுகளின் (இஜிஆர்) திட்டத்தில் கையில் வைத்திருக்கும் தங்கத்தை பெட்டகத்தில் (வாலெட்) டெபாசிட் செய்ய வேண்டும். இதற்காக, அந்த வாலெட் மேனேஜர் மின்னணு ரசீதை வழங்குவார். மேலும், இது முதலீட்டாளர்களின் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த ரசீதை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யலாம்.
இந்த திட்டம் தொடர்பான வரி விவகாரங்களை கையாளுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அரசுடன் செபி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதில், முதலீட்டாளர்களுக்கு திருப்திகரமான, வெளிப்படையான முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) விரைவில் இஜிஆர் வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தங்கம் பாதுகாப்பாக ஒரு பெட்டகத்திலேயே இருக்கும். மேலும், அது வருமானத்
தையும் உருவாக்கித் தரும். பயன்படுத்தாத தங்கத்தை பயன்படுத்தி ஆதாயத்தைப் பெறுவதே இஜிஆர் திட்டத்தின் முக்கிய நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.