வணிகம்

டாடா - எஸ்ஐஏ விமான சேவை விரைவில் தொடங்கும்

செய்திப்பிரிவு

டாடா - எஸ்ஐஏ விமான சேவை இந்த வருடம் செப்டம்பர் - அக்டோபரில் தொடங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித் திருக்கிறது. விமான சேவை தொடங்குவதற்கு உரிமம் வாங்கும் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றது என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

உரிமம் விரைவாக கிடைக்கும் பட்சத்தில் உள்நாட்டு சேவை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங் கப்படும் என்று நிறுவனத்தின் முதன்மை மனிதவள அலுவலர் எஸ்.வரதராஜன் தெரிவித்தார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) நடத்திய மனிதவள மாநாட்டில் கலந்துகொண்ட அவர் இதனை தெரிவித்தார். உரிமம் வாங்குவதற்கு தேவையான அத்தனை விவரங்களையும் கொடுத்துவிட்டோம், உரிமத் துக்காக காத்திருக்கிறோம் என்றார் வரதராஜன். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நான்கு அல்லது ஐந்து விமானங்களை வாங்க இருப்பதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் 20 விமானங்களை வாங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆரம்ப கட்டமாக எந்தெந்த ஊர்களுக்கு விமான சேவை தொடங்கப்படும் என்று செய்தியா ளர்கள் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

SCROLL FOR NEXT