பொதுத்துறை நிறுவனங்களில் 79 நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இந்த நிறுவனங்களில் 49 நிறுவனங்கள் நலிவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துமூலமாக அளித்த பதிலில் இந்த நிறுவனங்களில் அரசு செய்துள்ள முதலீடு ரூ. 1,57,211 கோடி என்றார். பொதுத்துறை நிறுவ னங்கள் தனியார் நிறுவனங் களோடு போட்டியிடும் அளவுக்கு தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.