வணிகம்

இவரைத் தெரியுமா?- ராஜன் கோஹ்லி

செய்திப்பிரிவு

விப்ரோ டிஜிட்டல் நிறுவனத்தின் சர்வதேச தலைவராக உள்ளார். நிறுவனத்தின் முதன்மை துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார்.

குழும நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இதற்கு முன்பு நிறுவனத்தின் வங்கி மற்றும் நிதிச் சேவை பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்.

தலைமை சந்தை அதிகாரியாகவும் பணியாற்றியவர். உத்திகள் வகுப்பது, வாடிக்கையாளர் நல்லுறவு, வருவாய், லாபம் மற்றும் திறன் மேம்பாடு, சந்தையிடுதல் உள்ளிட்டவற்றில் வல்லுனர்.

நிறுவனத்தின் வங்கி சேவை பிரிவின் அமெரிக்க விற்பனை அதிகாரியாகவும் இருந்தவர்.

சண்டீகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். பெங்களூருவில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை உயர்கல்வி முடித்தவர்.

SCROLL FOR NEXT