சர்வதேச அளவில் கனரக பொருட் கள் தயாரிப்பில் முன்னணி நிறுவன மான கும்மின்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2008-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை இதே நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக இருந்தவர்.
2003-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை இதே நிறுவனத்தின் பவர் ஜெனரேஷன் தொழிலுக்கு தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
இந்தியானா பொருளாதார மேம்பாட்டுக் கூட்டமைப்பின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
ஹோல்செட் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
பேக்டிவ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
புரூடென்ஷியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் முதலீட்டு மேலாளராக பணிபுரிந்தவர்.
கிளேர்மோண்ட் மெக்கென்னா கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இன்ஜினீயரிங் பட்டமும் ஸ்டான்போர்டு பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.