புதுடெல்லி: ஆசியாவின் சக்திவாய்ந்த 20பெண் தொழிலதிபர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 3 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
2020-ம் ஆண்டு அமலான கரோனா ஊரடங்கால் தொழில் செயல்பாடுகள் முடங்கின. இந்த நெருக்கடிகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு தங்கள் தொழிலை வளர்ச்சிப் பாதையில் செலுத்திய 20 ஆசிய பெண் தொழில் தலைவர்களை போர்ப்ஸ் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சோமா மண்டல், எம்க்யூர் பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நமீதா தாப்பர், ஹோனசா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் இணை நிறுவனர் கஜல் அலக் ஆகிய 3 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.