கோப்புப்படம் 
வணிகம்

சென்செக்ஸ் 235 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவு

செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது சென்செக்ஸ் 235 புள்ளிகள் (0.39 சதவீதம்) உயர்ந்து 61,185 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 86 புள்ளிகள் (0.47 சதவீதம்) உயர்ந்து 18,203 ஆக இருந்தது.

கடந்த வாரத்தின் மந்தமான போக்குகளுக்கு மத்தியில், திங்கள்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின. அனைத்து பங்குகளும் நேர்மறை போக்கையே காட்டின. காலை 09:39 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 101.49 புள்ளிகள் ஏற்றத்துடன் 61,051.85 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 92.85 புள்ளிகள் உயர்வுடன் 18,210.00 ஆக இருந்தது.

இந்நிலையில், பங்குச்சந்தையில் திங்கள்கிழமை வர்த்தகம் ஒரு கலவையான போக்குடனேயே இருந்தது. சென்செக்ஸ் 60,714 - 61,401 இடையில் ஏற்ற இறக்கங்களுடன் பயணித்து, வர்த்த நேர முடிவில் 234.79 புள்ளிகள் உயர்ந்து 61,185.15 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 200 புள்ளிகள் வரை மேல சென்று இறுதியில் 85.65 புள்ளிகள் உயர்வுடன் 18,202.80 ஆக இருந்தது.

இந்திய சந்தைகளின் காலை வர்த்தகம் நேர்மறை போக்குடனேயே தொடங்கிய போதிலும், வர்த்தக நேரத்தின்போது ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பயணித்த சந்தைப் போக்கு இறுதியில் ஏற்றத்துடனேயே நிறைவடைந்தது. உலகளாவிய சந்தைப்போக்குகள் இந்திய சந்தையை பாதித்த போதிலும் இன்றைய சந்தையில் வங்கி, ஆட்டோ மொபைல், உலோக நிறுவனப் பங்குகளின் உயர்வு சந்தையை மீட்டெடுக்க உதவின

இன்றைய வர்த்தகத்தில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல்ஸ், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், எம் அண்ட் எம், மாருதி சுசூகி, பவர் க்ரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி, பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. மறுபுறம் ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், சன்பார்மா, டைட்டன், டாக்டர் ரெட்டிஸ், இன்ஃபேசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தன.

SCROLL FOR NEXT