வணிகம்

ஏற்றத்துடன் மீண்டெழுந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள், நிஃப்டி 100 புள்ளிகள் உயர்வு

செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள்(0.69 சதவீதம்) வரை உயர்ந்து 61,371 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி136 புள்ளிகள்(0.76 சதவீதம்) உயர்ந்து 18,254 ஆக இருந்தது.

கடந்த வாரத்தின் மந்தமான போக்குகளுக்கு மத்தியில், திங்கள்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின. அனைத்து பங்குகளும் நேர்மறை போக்கையே காட்டின. காலை 09:39 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 101.49 புள்ளிகள் ஏற்றத்துடன் 61,051.85 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 92.85 புள்ளிகள் உயர்வுடன் 18210.00 ஆக இருந்தது.

உலக வர்த்தகத்தின் நேர்மறையான சந்தை போக்கின் எதிரொலி, எஃப்ஐஐ-ன் தொடர்ந்த முதலீடுகள், வங்கித்துறைகளின் ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை நேர்மறை போக்குடனேயே தொடங்கியது.

இன்றைய வர்த்தத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பவர் க்ரீடு கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல்ஸ், மாருதி சூசுகி, எம் அண்ட் எம், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், ஐடிசி, ஆக்சிஸ் பேங்க், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி, எல் அண்ட் டி, ஹெச்டிஎல் டெக்னாலஜி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் இருந்தது. மறுமுனையில், டிசிஎஸ், டெக் மகேந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

SCROLL FOR NEXT