சென்னை: நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா, புதிதாக பரோடா திரங்கா பிளஸ் வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பரோடா திரங்கா பிளஸ் வைப்பு திட்டம் கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில் 399 நாட்களுக்கான வைப்புக்கு அதிகபட்சமாக 7.5 சதவீத ஆண்டு வட்டி பெற முடியும். இதில் மூத்த குடிமக்களுக்கான 0.50 சதவீத வட்டி மற்றும் இடையில் திரும்பப் பெற முடியாத வைப்புகளுக்கான வட்டி 0.25% வழங்கப்படும். ரூ.2 கோடிக்குக் குறைவான சில்லறை கால வைப்புகளுக்கு இந்த திட்டம் பொருந்தும். மேலும் இடையில் திரும்பப்பெற முடியாத கால வைப்புகளுக் கான பிரீமியத்தை வங்கி 0.15 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. புதிய திட்டம் குறித்து வங்கியின் செயல் இயக்குநர் அஜய் கே.குரானா கூறும்போது, "அதிகரித்து வரும் வட்டி விகித சூழலில், வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குவதில் வங்கி மகிழ்ச்சியடைகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் சேமிப்பில் அதிகம் வருவாய் ஈட்ட முடியும். பராடோ திரங்கா பிளஸ் வைப்பு திட்டம் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் உறுதியான வருமானத்தை வழங்குகிறது" என்றார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.