வணிகம்

பண மதிப்பு நீக்கத்தால் வளர்ச்சி விகிதம் குறையும்: பிட்ச் ரேட்டிங்க்ஸ் கணிப்பு

செய்திப்பிரிவு

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதால் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக குறையும் எனவும் தற்காலிகமாக பல சிக்கல்களை இந்திய பொருளாதாரம் சந்திக்கும் எனவும் பிட்ச் ரேட்டிங்ஸ் கணித்திருக்கிறது. முன்னதாக நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும் என பிட்ச் கூறியிருந்தது.

கணிப்பில் மேலும் பிட்ச் கூறியிருப்பதாவது: பணப்புழக்க தட்டுப்பாட்டால் நடப்பு காலாண்டில் பொருளாதார நடவடிக்கை மிகவும் பாதிக்கப்படும். அரசு தொடர்ந்து செய்துவரும் சீர்திருத்த நடவடிக் கைகள், ஏழாவது சம்பள கமிஷன் ஆகிய காரணங்களால் அதிக வளர்ச்சி உருவாவதற்கான சாத்தி யம் இருந்தது. ஆனால் தற் போதைய மந்த நிலையில் அவை நிச்சயமற்றவையாக இருக்கின்றன.

பணப்புழக்கம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க முடியவில்லை. அனைத்து விதமான சங்கிலித்தொடர் நட வடிக்கைகளும் அறுபட்டிருக்கின் றன. விவசாயிகள் விதைகளை வாங்குவதற்கு கூட பணம் இல் லாமல் தவிக்கின்றனர். தவிர மக்கள் வங்கி முன்பும் ஏடிஎம் முன்பாகவும் வரிசையில் நிற்பதால் மொத்த உற்பத்தி திறன் பாதிப்படைகிறது. இதே நிலை தொடரும் போது வளர்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும்.

பல விதமான நடவடிக்கைகளில் பண மதிப்பு நீக்கமும் ஒன்று. முறையற்ற வழிகளில் வர்த்தகம் செய்பவர்கள் புதிய ரூபாய் நோட்டுகள், தங்கம் உள்ளிட்ட இதர வழிகளில் தங்களது சொத்துகளை சேர்த்துக்கொள்வார்கள். இன்னும் சில நாட்களில் ஏற்கெனவே தொழில் செய்த முறைக்கு மாறிவிடுவார் கள். ரொக்கமற்ற பண பரிவர்த் தனைக்கு அரசு புதிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டெபாசிட் அதிகரித்திருப்பதால் வங்கி வட்டி விகிதம் குறைவதற்காக வாய்ப்புகள் உருவாகி உள்ளன. ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை குறைத்தற்கு சமமாக அளவில் வட்டி விகிதம் வர வாய்ப்பு இருக் கிறது. ஆனால் அடுத்த சில மாதங் களில் வங்கிகளில் எவ்வளவு டெபாசிட் இருக்கிறது என்பதை பொறுத்துதான் வட்டி விகிதம் இருக் கும் என பிட்ச் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக 2017-18 மற்றும் 2018-19 ஆகிய நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சி இருக்கும் என பிட்ச் கணித்திருந்தது. ஆனால் அந்த வளர்ச்சி விகிதங்களையும் 7.7 சதவீதமாக குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT