பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி திலீப் 
வணிகம்

ட்விட்டர் ப்ளூ டிக் கட்டணம் | இந்தியாவில் யுபிஐ ஆட்டோ-பே மூலம் வசூலிக்கலாம்: NPCI சிஇஓ

செய்திப்பிரிவு

மும்பை: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், பல்வேறு மாற்றங்களை அதில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் அதற்கென மாதந்தோறும் கட்டணம் வசூலிப்பது. இது விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில் தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி திலீப் அந்தக் கட்டணத்தை இந்தியாவில் யுபிஐ ஆட்டோ-பே மூலம் வசூலிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் சுமார் 8 அமெரிக்க டாலர்களை ப்ளூ டிக் பெற்ற பயனர்கள் இடத்தில் வசூலிக்க உள்ளது ட்விட்டர். இந்திய ரூபாய் மதிப்பில் இந்தக் கட்டணம் இப்போதைக்கு ரூ.662 என தெரிகிறது. இந்தச் சூழலில்தான் இதனை திலீப் தெரிவித்துள்ளார்.

“கவலை வேண்டாம், இந்தியாவில் யுபிஐ ஆட்டோ-பே கட்டண வசூல் முறை உள்ளது. அதில் சுமார் 7 மில்லியன் பேர் உள்ளனர். அன்பான ட்விட்டர் நிறுவனமே, நீங்கள் விரும்பியபடி எப்போது வேண்டுமானாலும் மாதம், மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் அதற்கான கட்டணத்தை பெறலாம்” என அவர் தெரிவித்துள்ளார். இதனை ப்ளூ டிக் கட்டணம் தொடர்பாக மஸ்க் பகிர்ந்த ட்வீட்டிற்கு பதில் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சில ஓடிடி தளங்கள் ஆட்டோபே முறையில்தான் கட்டண சந்தாவை செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. பயனர்கள் அதை கவனித்து தங்களது சந்தாவை ரத்து செய்யவில்லை எனில் தானியங்கு முறையில் சந்தா கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

SCROLL FOR NEXT