வணிகம்

மிரபியு நிறுவனத்தை வாங்கியது காக்னிசென்ட்

செய்திப்பிரிவு

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையை சேர்ந்த மிரபியு பிவி (Mirabeau BV) நிறுவனத்தை காக்னிசென்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. 15 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளி யாகவில்லை. இதன் மூலம் மிரபியு நிறுவனத்தின் 260 சிறப்பு வாய்ந்த பணியாளர்கள் காக்னிசென்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் பிஸினஸ் பிரிவில் இணைவார்கள். இதன் மூலம் நெதர்லாந்து மட்டுமல்லாமல் ஐரோப்பாவில் டிஜிட்டல் பிரிவு விரிவடைய இந்த இணைப்பு பயனுள்ளதாக இருக்கும் என காக்னிசென்ட் தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்டர்டாமை மையமாக கொண்டு மிரபியு நிறுவனம் செயல் படுகிறது. டிராவல், ஹாஸ்பிடா லிட்டி, நிதிசேவை, சில்லரை வர்த்தகம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. கேஎல்எம், ஐஎன்ஜி, ஏர் பிரான்ஸ், டிரான்ஸ்ஏவியா, லீஸ்பிளான் டாட் காம் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் வாடிக்கையாளர் களாக இருக்கின்றனர்.

இரு நிறுவனங்களும் இணை யும் போது வாடிக்கை யாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்க முடியும் என மிரபியு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அட்ஜன் கொடே (Adjan Kodde) கூறினார்.

SCROLL FOR NEXT