வணிகம்

சென்செக்ஸ் 787 புள்ளிகள் உயர்ந்து 60,000-ஐ கடந்தது!

செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை வர்த்தகம் முடிவைடையும்போது சென்செக்ஸ் 787 புள்ளிகள் (1.3 சதவீதம்) உயர்ந்து 60,747 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 225 புள்ளிகள் (1.26 சதவீதம்) உயர்ந்து 18,011 ஆக நிலைகொண்டது.

பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. அனைத்து வகையான பங்குகளும் சாதகமான போக்குகளையே கொண்டிருந்தன. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 60,486 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 140 புள்ளிகள் உயர்ந்து 17,929 ஆக இருந்தது.

இந்நிலையில், பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 786.74 புள்ளிகள் உயர்ந்து 60,746.59 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 225.40 புள்ளிகள் உயர்ந்து 18,012.20 ஆக இருந்தது.

உலகலாவிய சந்தைப் போக்கு, புதிய வெளிநாட்டு நிதி வருகை போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளின் விகிதம் தலா 1 சதவீதம் உயர்ந்திருந்தது. நிதி சேவை, ஐடி, பார்மா, ஆட்டோ மொபைல்ஸ், வாடிக்கையாளர் சேவை போன்ற அனைத்து வகையான பங்குகளும் 1 சதவீதம் ஏற்றம் கண்டிருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்றைய வர்த்தகத்தில் அல்டாரா டெக் சிமெண்ட், சன் பார்மா, ஹெச்டிஎஃப்சி ட்வின்ஸ், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், பஜாஜ் ட்வின்ஸ், பாரதி ஏர்டெல், ஆசியன் பெயின்ட்ஸ், இன்ஃபோசிஸ், டெக் எம், கோடாக் பேங்க், ஹெச்யுஎல், டைட்டன் மற்றும் ஐடிசி பங்குகள் 1 - 4 சதவீதம் உயர்ந்திருந்தன. மறுபுறம், என்டிபிசி, டாக்டர் ரெட்டிஸ் லேப், இன்டஸ்இன்ட் பேங்க் நெல்ட்லே பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 0.7 சதவீதம் சரிவடைந்திருந்தன.

SCROLL FOR NEXT