சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 82 சதவீதம் உயர்ந்து ரூ. 77 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.42 கோடியாக நிகர லாபம் இருந்தது. மொத்த வருமானம் 11 சதவீதம் உயர்ந்து ரூ.738 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் ரூ.660 கோடியாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 89 சதவீதம் உயர்ந்து ரூ.152 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் ரூ.80.67 கோடியாக இருந்தது. அதேபோல முதல் அரையாண்டில் வருமானமும் ரூ.1,292 கோடியில் இருந்து ரூ.1,451 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 1.70 ரூபாய் வழங்க இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
நேற்று பங்குச்சந்தை சரிந்த போதிலும் இந்த பங்கு 4.5 சதவீதம் உயர்ந்து முடிந்தது. வர்த்தகத்தின் இடையே 9 சதவீதம் உயர்ந்து தன்னுடைய 52 வார உயர்ந்த பட்ச விலையான 355 ரூபாயை தொட்டது.