பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் நன்கொடை வழங்குவதற்காக 9.5 கோடி டாலர் பங்குகளை விற்றிருக்கிறார். கடந்த நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் இந்த பங்குகள் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்க் ஜூகர்பெர்க் சொத்து மதிப்பு 5,200 கோடி டாலராக இருக்கிறது. கடந்த வருடத்தில் பேஸ்புக் பங்குகள் விலை உயர்ந்ததை அடுத்து அவரது சொத்துமதிப்பும் உயர்ந்தது. கடந்த செப்டம்பரில் 300 கோடி டாலர் நன்கொடைக்காக செலவு செய்வதாக ஜூகர்பெர்க் கூறினார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபரில் தலா 19 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை நன்கொடைக்காக விற்றது குறிப்பிடத்தக்கது.