வணிகம்

ஸ்பைஸ்ஜெட் நிகர லாபம் 103 சதவீதம் உயர்வு

ஐஏஎன்எஸ்

பட்ஜெட் விமான சேவை நிறுவன மான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு நிகர லாபம் 103 சதவீதம் அதிகரித்துள்ளது. 2016-17 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவு களை ஸ்பைஸ்ஜெட் நேற்று அறிவித்தது

நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு நிகர லாபம் ரூ. 58.90 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ. 29 கோடியாக இருந்தது. சந்தையில் போட்டிகள் இருந்தபோதிலும் நடப்பாண்டின் வளர்ச்சி குறைந்த காலாண்டாக இரண்டாவது காலாண்டு அமைந்துள்ளது. எனினும் நிறுவனம் சிறப்பான சேவையையே வெளிப்படுத்தியது. தொடர்ந்து லாபகரமான வளர்ச்சியை நோக்கி கவனம் செலுத்துவோம் என்று நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT