மதுரை: மதுரை பிஎஸ்என்எல் பொது மேலாளர் வேணுகோபால் ரியாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பிஎஸ்என்எல் நிறுவனம் தனது எப்டிடிஎச் சேவையில் 300 எம்பிபிஎஸ் வரை டவுன் லோடு வேகம், மிகக் குறைந்த மாத வாடகை, இலவச இணைப்பாக டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் போன்றவை வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.
இத்திட்டங்களோடு தற்போது பல்வேறு சலுகைகளுடன் கூடிய புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது. 13.11.22 வரை புதிய இணைப்பை பெறும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மாத வாடகையில் 90 சதவீதம் (ரூ.500 வரை) தள்ளுபடி செய்யப்படும்.
குறிப்பிட்ட பிளான்களில் 6 மாத வாடகை செலுத்துவோருக்கு சிங்கிள் பேண்ட் மோடம் இலவசம். மேலும் 12 மாத வாடகை செலுத்துவோருக்கு டூயல் பேண்ட் மோடம் இலவசமாக வழங்கப்படும். ஏற்கெனவே வைத்துள்ள பிஎஸ்என்எல் லேண்ட் லைன் இணைப்பை எப்டிடிஎச்-க்கு மாற்றிக் கொள்வோருக்கு மாதம் ரூ.200 வீதம் 6 மாதங்களுக்கு ரூ.1200 தள்ளுபடி வழங்கும் சலுகை டிச.6 வரை அமலில் இருக்கும்.
மொபைல் சேவை பிரிவில் ரூ.439-க்கு 90 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய் துள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் 300 இலவச நிமிடங்கள், 3 ஜிபி டேட்டா, 30 எஸ்எம்எஸ் உள்ளிட்ட இலவசங்களுடன் கூடிய 12 மாத வேலிடிட்டி கொண்ட 1198 என்ற புதிய பிளானையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அக்.22 முதல் 28-ம்தேதி வரை ரூ.110-க்கு 110 முழு டாக்டைம் போன்ற சரவெடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.