என்எல்சி இந்தியா திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் மோகன் ரெட்டி மற்றும் தேசிய காற்றாலை மின்சக்தி நிலைய பொது இயக்குநர் டாக்டர் கே. பலராமன் ஆகியோர் ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர். 
வணிகம்

கடலில் மிதக்கும் காற்றாலைகளை அமைக்கிறது என்எல்சி இந்தியா - தேசிய காற்றாலை மின்சக்தி நிலையத்துடன் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

நவீன தொழில் நுட்பத்திலான காற்றாலைகளை, கடலிலும் நிலத்திலும் அமைப்பதற்காக, தேசிய காற்றாலை மின்சக்தி நிலையத்துடன் சென்னையில் என்எல்சி இந்தியா நிறுவனம்ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனம் அளித்துள்ள தகவல் விவரம் வருமாறு:

என்எல்சி இந்தியா நிறுவனம், பல்வேறு பசுமை மின்திட்டங்களை அமைத்து வரும் நிலையில், புதிய காற்றாலை மின் நிலையங் களை கடலிலும், கரையிலும் அமைப்பதற்காக தொழில் நுட்பங்களைப் பெறவும் அதிகா ரிகளுக்குப் பயிற்சி வழங்கவும், இந்த ஒப் பந்தத்தை என்எல்சி இந்தியா நிறுவனம் மேற் கொண்டுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள தேசிய காற்றாலை மின்சக்தி நிலையத்தின் தலைமை அலுவலகத்தில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் மோகன் ரெட்டி மற்றும் தேசிய காற்றாலை மின்சக்தி நிலையத்தின்பொது இயக்குநர் டாக்டர் கே. பலராமன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டனர்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராக்கேஷ் குமார் காணொலி மூலம் இந்நிகழ்வில் பங்கேற்று, நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமை மின்திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.

தற்போது என்எல்சி இந்தியா நிறுவனம் இயக்கி வரும் காற்றாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் புதிய காற்றாலை மின் நிலையங்களில் சிறப்பான வகையிலான இயக்குதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற அம்சங்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT