புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையில் கால் பதித்தது. அறிமுகமான சில ஆண்டுகளில் இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ நிறுவனம் முதல் இடம் பிடித்தது.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஜியோ நிறுவனம் லேண்ட்லைன் (சாதாரண போன்) வசதியை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக லேண்ட்லைன் சேவை வழங்கி வருகிறது. மொபைல் சேவையில் பிஎஸ்என்எல் பின்தங்கி இருந்தாலும் லேண்ட்லைன் சேவையில் முதல் இடம் வகித்து வந்தது.
3 ஆண்டுகளில்...
இந்நிலையில், 3 ஆண்டு களுக்கு முன்னால் அறிமுகமான ஜியோ, லேண்ட்லைன் சேவை யில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்துள்ளது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி இந்தியாவில் 2.59 கோடி பேர் லேண்ட்லைன் சேவை பெற் றுள்ளனர். ஜியோ நிறுவனம் 73.5 லட்சம் சந்தாதாரர்களையும், பிஎஸ்என்எல் நிறுவனம் 71.3 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள் ளன. ஏர்டெல் நிறுவனம் 62 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 15,000 லேண்ட்லைன் சந்தாதாரர்களை இழந்த நிலையில், ஜியோ நிறுவனம் 2.62 லட்ச சந்தாதாரர்களையும், ஏர்டெல் நிறுவனம் 1.19 லட்ச சந்தாதாரர்களையும் புதிதாகபெற்றன.
3 பிரிவிலும் முதலிடம்
தற்போது மொபைல் சேவை, இணைய சேவை, லேண்ட்லைன் சேவை என தொலைத்தொடர்புத் துறையின் மூன்று பிரிவுகளிலும் ஜியோ முதலிடம் வகிக்கிறது.