நாட்டின் பருப்பு விளைச்சலை அதிகரிக்க புதிய வீரிய ரக பருப்பு விதைகளை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பருப்பு தேவையில் தன்னிறைவை எட்டுவதே இலக்காகும். அதற்காக புதிய வீரிய ரக பருப்பு விதைகள் நீண்ட ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய வேளாண் ஆய்வு மையத்தில் (ஐஏஆர்ஐ) நேற்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின நிகழ்ச்சி மற்றும் சர்தார் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஜேட்லி. அப்போது ஐஏஆர்ஐ உருவாக்கியுள்ள வீரிய ரக பருப்பு செடிகளை அவர் பார்வையிட்டார்.
இந்த மையம் புதிதாக உருவாக்கப்பட்ட வீரிய ரக பருப்புக்கு பூசா 16 என பெயரிட்டுள்ளது. இது வர்த்தக ரீதியில் விரைவில் விற்பனைக்கு வரும். இது வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வரும்போது பருப்பு உற்பத்தியில் மிக பெரிய மாற்றம் உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டின் பருப்பு தேவையை விட குறைவாகவே பருப்பு விளைச்சல் உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் வறட்சியின் விளைவாக பருப்பு விலைகள் மிக அதிகம் உயர்ந்துள்ளன. புதிய ரக பூசா 16 பருப்பு வகைகள் நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று ஜேட்லி குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பருப்பு விலையைக் கட்டுக்குள் வைக்க அரசு தீவிர முயற்சி மேற் கொண்டு வருகிறது. நமது உணவில் புரதச் சத்து அளிக்கக் கூடியதாக இது திகழ்கிறது. சர்வதேச அளவில் அதிகம் பருப்பு உற்பத்தி செய்யப் பட்டாலும், இங்கு தேவையும் அதிகமாக உள்ளது. இதனால் இறக் குமதி செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக தட்டுப்பாடு நிலவு கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பருப்பு சாகுபடியை அதிகரிக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதிச் சலுகைகள் அளிக்கப்பட்டன. அதன் பலன் இந்த ஆண்டு தெரிய வரும் என்றார் ஜேட்லி.
தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியனும், வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங்கும் பருப்பு விளைச் சலை ஊக்குவிக்க சலுகைகள் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளதையும் ஜேட்லி சுட்டிக் காட்டினார்.
2017 குறுவை சாகுபடிக்கு இந்த பூசா 16 பருப்பு விதைகள் விற்பனைக்குக் கிடைக்கும் என்று வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் குறிப்பிட்டார். இந்த பருப்பு விளைச்சல் அதிகமாக இருக்கும். இதனால் மூன்று ஆண்டுகளில் பருப்பு சாகுபடியில் இந்தியா தன்னிறைவை எட்டும் என்றார்.
புதிய பருப்பு ரகமானது நான்கு மாதங்களில் அறுவடை செய்யக் கூடியதாகும். வழக்கமான பருப்பு வகைகள் 6 முதல் 9 மாதங்கள் வரை காலம் எடுத்துக் கொள்ளும்.