வணிகம்

சிறந்த தனியார் வங்கி கேவிபி: டன் & பிராட்ஸ்டிரீட் விருது

செய்திப்பிரிவு

கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி), தனியார் வங்கிகளில் சிறப்பான வங்கியாக செயல்படுகிறது. முன்னுரிமைக் கடன்களுக்கு இந்த வங்கி முன்னுரிமை அளிக்கிறது என்று டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் நிறுவனம் சான்றளித்துள்ளது.

இரண்டாம் காலாண்டில் வங்கியின் நிதி நிலை அறிக்கை வெளியான நிலையில் வங்கியின் செயல்பாடுகளை ஆய்வு செய்து இந்த விருதை அளித்து கவுரவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டன் அண்ட் பிராட்ஸ்டிரீட் நிறுவனம் வர்த்தகம் சார்ந்த ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. தகவல் தொழில்நுட்பம், சேவை, ஆய்வு, சாஃப்ட்வேர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் 2-ம் காலாண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 90 ஆயிரம் கோடியைக் கடந்து ரூ.91,539 கோடியாக உயர்ந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் 3.39 சதவீதமாக இருந்தது.

SCROLL FOR NEXT