நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 
வணிகம்

'ரூபாய் மதிப்பு குறையவில்லை; டாலர் மதிப்பு தான் உயர்ந்திருக்கிறது' - நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் 

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருவதாக பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வரும் நிலையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெறுகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு வீழவில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.69 என்றளவிற்கு குறைந்துள்ள நிலையில் செய்தியாளார்களுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது என்றே சொல்வேன். ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

டாலர் வலுப்பெறும் சூழல் உலகளவில் மற்ற நாணயங்களை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உறுதியாக இருக்கிறது. அந்நிய செலாவணி சந்தையில் மற்ற எல்லா நாணயங்களையும் விட சந்தை மாற்றங்களை இந்திய ரூபாய் சிறப்பாக எதிர்கொண்டுள்ளது என்றார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் காரணமாகவே உலகம் முழுவதும் எண்ணெய் விலை தொடங்கி உணவுப் பொருட்களை விலை வரை அதிகரித்துள்ளது. பல நாடுகளில் பணவீக்கப் பிரச்சினை எழுந்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

SCROLL FOR NEXT