வணிகம்

சூரிய மின்னாற்றல் துறையில் ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை

செய்திப்பிரிவு

சூரிய மின்னாற்றல் துறையில் ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டிலேயே சூரிய மின்னாற்றலுக்குத் தேவையான கருவிகளை தயாரிப்பதன் மூலம் இத்தகைய வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்று மோசர் பேயர் சூரிய ஆற்றல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே.என். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அதேசமயம் சீனா, தைவான் ஆகிய நாடுகளிலிருந்து பொருள்கள் இறக்குமதி செய்வதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2017-ம் ஆண்டுக்குள் சூரிய மின்னாற்றல் மூலம் ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட வேண்டுமாயின் ஆண்டுக்கு 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும்.

ஒரு மெகாவாட் சூரிய மின்னாற்றல் உற்பத்திக்குத் தேவையான கருவிகளைத் தயாரிக்க 50 பேர் தேவைப்படுவர். இதன்படி ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

சூரிய மேற்கூரை அமைப் பதற்கு வரிச் சலுகையை அரசு அறிவித்தால் தனி நபர்களும் இதைப் பயன்படுத்த முன்வருவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT