வணிகம்

செப்டம்பர் மாதத்தில் ரூ.11.2 லட்சம் கோடி யுபிஐ மூலம் பரிவர்த்தனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.11.2 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பரிவர்த்தனை எண்ணிக்கை 678 கோடியாக உள்ளது.ஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.10.7 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டது.

யுபிஐ பரிவர்த்தனை இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடை முறைக்கு வந்தது. தற்போது இந்தியாவில் பெட்டிக் கடை முதல் பெரிய அளவிலான வணிகப் பரிவர்த்தனை வரை யுபிஐ இன்றியமையாததாக மாறியுள்ளது.

முதன் முறையாக 2019 அக்டோபரில் யுபிஐ பரிவர்த்தனை 100 கோடியைக் கடந்தது. 2020 அக்டோபரில் அது 200 கோடியைக் கடந்தது. கரோனாவுக்குப் பிறகு யுபிஐ பயன்பாடு மிக வேகமாக அதிகரித்தது.
இந்த ஆண்டு ஜூலையில் யுபிஐ பரிவர்த்தனை 600 கோடியைத் தாண்டியது. அடுத்த 5 ஆண்டுக்குள் யுபிஐ வழியான தினசரி பரிவத்தனைகளை 100 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யுபிஐ கட்டமைப்பில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

SCROLL FOR NEXT