அமெரிக்காவில் ஆலையைத் தொடங்கி பல அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருவதில் டாடா நிறுவனம் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி குறிப்பிட்டார். அமெரிக்காவில் உள்ள அறிவுசார் மையம் ஏற்பாடு செய்திருந்த இந்தியா குறித்த அமெரிக்க கொள்கை பற்றிய கூட்டத்தில் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
ஆட்டோ வடிவமைப்பு மற்றும் விற்பனை மூலம் டாடா நிறுவனம் 24 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்திய முதலீடுகள் மூலம் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளாக அவர் தெரிவித்தார். இந்திய நிறுவனம் அமெரிக்காவில் வேலை வாய்ப்பை உருவாக்குவதைப் போல அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ஆலையைத் தொடங்கி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
வட அமெரிக்காவில் 12 நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது டாடா. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளன.
சோடா சாம்பல் சுரங்கம் வியோமிங் பகுதியிலும், காபி உற்பத்தி ஆலை மேரிலாண் டிலும், உருக்கு உற்பத்தி ஆலைகள் ஒஹையோ மற்றும் பென்சில்வேனியாவிலும், தேயிலை பதப்படுத்தும் மையங் கள் புளோரிடா, ஜார்ஜியா மற்றும் நியூ ஜெர்சியிலும், நி கலிபோர்னியாவில் அனிமேஷன் ஆய்வகம், தகவல் தொழில்நுட்ப மையங்கள் மிச்சிகன், ஒஹை யோவிலும் உள்ளன.