வீடியோகான் டிடீஹெச் மற்றும் டிஷ் டிவி ஆகிய இரு நிறுவனங்களும் இணைகின்றன. இந்த இணைப்பை இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றன. இரு நிறுவனங்களின் இயக்குநர் குழு இதற்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. புதிய நிறுவனத்தின் பெயர் `டிஷ் டிவி வீடியோகான்’ என இருக்கும். புதிய நிறுவனத்தில் டிஷ் டிவி 55 சதவீதமும் விடீயோகான் 45 சதவீத பங்குகளும் வைத்திருக்கும். மொத்த சந்தையில் 45 சதவீதம் இந்த புதிய நிறுவனத்திடம் இருக்கும். மொத்த வாடிக்கையாளர் 2.76 கோடி ஆகும். அடுத்த இடத்தில் இருக்கும் டாடா ஸ்கை 24.2 சதவீத சந்தையை வைத்துள்ளது.
இந்த நிறுவனங்களைத் தவிர சன் டைரக்ட், பிக்டிவி மற்றும் பார்தி டெலிமீடியா ஆகிய டிடீஹெச் நிறுவனங்கள் உள்ளன.