பண மதிப்பு நீக்கம் காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிப்பை போக்கு வதற்கு மத்திய அரசு அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தன் டாடா தெரிவித்திருக்கிறார்.
பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், தினசரி வாழ்க்கை மேம்படுவதற்கு சிறப்பு நடவடிக்கை தேவை என்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.