வணிகம்

இலவச சேவைகளை வழங்கும் எண்ணமில்லை: ஏர்டெல்

பிடிஐ

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் கட்டணக் குறைப்புக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. அதே நேரத்தில் இலவச சேவை களை வழங்கும் எண்ணமில்லை என்றும் கூறியுள்ளது. தொலைத் தொடர்பு சேவையில் புதிதாக இறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ குறைந்த கட்டணத்தில் சேவைகளை அளித்து வருகிறது.

இதுதொடர்பாக கூறியுள்ள பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய தலைமைச் செயல் அதிகாரி கோபால் விட்டல், தொலைத் தொடர்பு துறை கொடூரமான சந்தை போட்டியை சந்தித்து வருகிறது என குறிப்பிட்டார். இந்த சந்தைப் போட்டியில் ஏர்டெல் விலைக் குறைப்பு நடவடிக்கைகளை எடுக்குமா என்கிற கேள்விக்கு, விரைவில் விலைக் குறைப்பை பார்ப்பீர்கள், ஏனென்றால் இந்த விளையாட்டு புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது என்றும் கூறினார்.

பார்தி ஏர்டெல் ஏற்கெனவே அன்லிமிடெட் இலவச குரல் வழி சேவையை (ரூ.999க்கு) அளித்து வருகிறது. அதே நேரத்தில் முழுவதுமாக இலவச சேவையை வழங்கும் சாத்தியமில்லை. ஏனென் றால் பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் சாதாரண போன்கள் மற்றும் அடிப்படையான வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துகின்றனர். இவர்கள் பலரும் பல விதமான சேவைகளைப் பெறுகின்றனர். இவர்கள் குரல் வழி சேவை மற்றும் டேட்டா சேவை தனித்தனியே பெறுகின்றனர். இவர்கள் இணைந்தே சந்தையை உருவாக்குகிறார்கள் என்று கூறினார்.

சில வாடிக்கையாளர்களுக்கு குரல் வழி சேவை தனியாக வும், டேட்டா கட்டணம் தனியாக வும் தேவையாக இருக்கிறது. உயர்நிலை வாடிக்கையாளர் களுக்கு ஏற்ற சேவைகளில் அன் லிமிடெட் போன்ற சலுகைகளும் அளிக்கப்படுகின்றன என்றார்.

சந்தை தொடர்ந்து போட்டியை சந்தித்து வருகிறது ஆனால் நாங்கள் போட்டிகளை சந்திப்போம் என்கிற நம்பிக்கையோடுதான் உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT