வணிகம்

மிகவும் கவரக்கூடிய பிராண்ட் பட்டியலில் எல்ஜி முதலிடம்

செய்திப்பிரிவு

இந்தியாவில் மிகவும் கவரக்கூடிய பிராண்ட் பட்டியலில் தென் கொரியாவைச் சேர்ந்த நுகர்வோர் எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான எல்ஜி முதலிடத்தை பிடித்துள்ளது. டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மிகவும் கவரக்கூடிய பிராண்ட் பட்டியலில் டாடா நிறுவனம் இந்த வருடம் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. டாடா நிறுவனம் 2014-ம் ஆண்டு 5-வது இடத்திலும் 2015-ம் ஆண்டு 4-வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த ஆய்வு சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் நிறுவனத்திலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு எடுக்கப்பட்டதாகும்.

மொத்தம் 16 நகரங்களில் சுமார் 3,000 நுகர்வோர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் சாம்சங் மொபைல்ஸும் 2-வது இடத்தில் சோனியும் உள்ளன. 4-வது இடத்தில் ஹோண்டா உள்ளது.

மிகவும் கவரக்கூடிய பிராண்ட் பட்டியலில் வெளிநாட்டு நிறுவனங் களே முன்னணியில் உள்ளன. உள்நாட்டு நிறுவனங்களான பஜாஜ் 6-வது இடத்திலும் டாடா 7-வது இடத்திலும் மாருதி சுஸுகி 8-வது இடத்திலும் உள்ளன. ஏர்டெல் மற்றும் நோக்கியா முறையே 9-வது மற்றும் 10-வது இடத்திலும் உள்ளன.

எப்எம்சிஜி தயாரிப்புகளில் மிகவும் கவரக்கூடிய பிராண்டுகளில் பதஞ்சலி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ஹிந் துஸ்தான் யுனிலீவர், 3-வது இடத் தில் நிர்மா, 4-வது இடத்தில் இமாமி, 5-வது புராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனங்கள் உள்ளன.

SCROLL FOR NEXT