பண மதிப்பு நீக்கம் காரணமாக மக்களிடம் பணப்பழக்கம் குறைந்திருக்கிறது. தற்போதைய விதிகளின் படி ஒருவர் ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 24,000 ரூபாய் மட்டுமே வங்கி/ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியும். அதனால் பொதுமக்கள் பிரீமிய தொகை செலுத்த மேலும் 30 நாள் அவகாசம் வழங்க வேண்டும் என ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏ அறிவுறுத்தியுள்ளது.
நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டியவர்களுக்கு வழக்கமான அவகாசத்தை தவிர கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் வழங்கி இருக்கிறது ஐஆர்டிஏ.
அனைத்து நிறுவனங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.