வணிகம்

சிறு சேமிப்பு திட்டத்தில் பழைய நோட்டுகளை முதலீடு செய்ய தடை

செய்திப்பிரிவு

பண மதிப்பு நீக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய முடியாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

ஆனால் என்ன காரணத்துக்காக இந்த நடவடிக்கை என்பதை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை.

பிபிஎப், தபால் நிலைய சேமிப்பு கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய முடியாது.

SCROLL FOR NEXT