வணிகம்

எஸ்பிஐ யோனோ கணக்கு முடக்கப்பட்டுள்ளதா? - அதிகாரிகள் விளக்கம்

செய்திப்பிரிவு

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் சிலருக்கு நேற்று அவர்களது கைப்பேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், எஸ்பிஐ யோனோ செயலி கணக்கு இன்றைக்கு (நேற்றைக்கு) தடை செய்யப்படும்.

எனவே, கீழே உள்ள லிங்க்கின் மூலம் உங்களது பான் கார்டுவிவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, எஸ்பிஐ வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, பாரத ஸ்டேட் வங்கி பொதுவாக இதுபோன்ற தகவல்களை அனுப்பும்போது, அத்தகவல்களின் மேல் பகுதியில் எஸ்பிஐ என குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால், இத்தகவல் ஒரு குறிப்பிட்ட அலைபேசி எண்ணில் இருந்து வந்துள்ளது. எனவே, இது போலியான தகவல். இதை நம்பி யாரும் அந்த லிங்க்கில் சென்று பான் கார்டு விவரங்களை அளிக்க வேண்டாம் என்றனர்.

SCROLL FOR NEXT