வணிகம்

ரூ.11,999 முதல் தொடங்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்: மொபைல்களுக்கான சலுகையை அறிவித்த அமேசான்

செய்திப்பிரிவு

சென்னை: மொபைல் போன்களை சலுகை விலையில் விற்பனை செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம். அதன்படி அந்த தளத்தில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.11,999 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ சலுகையில் பொருட்களை வழங்க உள்ளது அமேசான்.

இந்தியாவில் பெரும்பாலான மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வர்த்தக தளங்களில் ஒன்று அமேசான். அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சலுகைகளை அறிவிப்பது அந்நிறுவனத்தின் வழக்கம். அதனை அந்த தளத்தின் வாடிக்கையாளர்களும் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த வகையில் இப்போது மொபைல் போன்களுக்கான சலுகைகளை அமேசான் அறிவித்துள்ளது.

ரியல்மி, ரெட்மி, சாம்சங், iQoo, சியோமி, ஒன்பிளஸ், டெக்னோ, விவோ, ஒப்போ, லாவா என முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இந்த சலுகையில் அடங்கும் என தெரிகிறது. ஐபோன் 12 மாடல் போன் 40 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும் என தெரிகிறது. அது குறித்து அறிந்து கொள்ள இந்த லிங்கை பார்க்கவும்.

இதே போல ஃபிளிப்கார்ட் நிறுவனமும் சலுகை அறிவித்துள்ளது. வரும் 23-ம் தேதி முதல் இரண்டு நிறுவனங்களும் பண்டிகை கால சலுகை விற்பனையை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT