ரூ.500 மற்றும் ரூ.1000 பழைய நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய நோட்டுகளை மக்கள் பெற்று வருகின்றனர். பலர் தங்களது வங்கியில் டெபாசிட்டும் செய்து வருகின்றனர். டெபாசிட் மூலமாகவும் பழைய நோட்டுகளை மாற்றியதன் மூலமாகவும் இதுவரை இந்திய வங்கிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்த பணப்புழக்கத்தில் 86% பணம் 500, 1,000 ரூபாய் நோட்டு களாக உள்ளன. இவையனைத் தும் டெபாசிட் மூலமாகவோ பழைய நோட்டுகளை மாற்றுவதன் மூலமாகவோ வங்கிகளுக்குச் செல்லும்.
சனிக்கிழமை வரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் டெபாசிட் மூலமாகவும் பழைய நோட்டுகளை மாற்றியதன் மூலமாகவும் ரூ. 54,370 கோடி வந்துள்ளது. எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகள் மொத்த பரிவர்த்தனையில் 20 முதல் 25 சதவீத பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு சிரமங்கள் இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த பொருளாதாரத்திற்கு நீண்ட கால நன்மைகள் உள்ளன என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.