வணிகம்

சென்செக்ஸ் 1,093 புள்ளிகள் வீழ்ச்சி

செய்திப்பிரிவு

மும்பை: சாதகமற்ற சர்வதேச நிலவரங்களின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து 3-வது நாளாக வீழ்ச்சியை சந்தித்தது.

அதிக சந்தை மதிப்பைக் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டெக்மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவனப் பங்குகளின் விலை 2 முதல் 4.5 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இன்டஸ்இண்ட் மற்றும் ஆக்ஸிஸ் வங்கி மட்டும் ஆதாயத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,093.22புள்ளிகள் (1.82%) வீழ்ச்சியடைந்து 58,840.79 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 346.55 புள்ளிகள் (1.94%) சரிந்து 17,530.85-ல் நிலைபெற்றது.

SCROLL FOR NEXT