சென்னை: ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவியை ஏற்படுத்தி தரும் வகையில் பில்லியனர் வென்சர் கேப்பிடல் மற்றும் டிபிஎஸ் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பில்லியனர் வென்சர் நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினரான சுபாஷ் குமார் கூறுகையில், ‘‘நாட்டில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக பில்லியனர் கேப்பிடல், டிபிஎஸ் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.1,600 கோடிஅளவுக்கு நிதி உதவி அளிக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட உள்ளது. இது இளம் தொழில்முனைவோர் ஸ்டார்ட்அப்களை தொடங்க ஊக்கமாக இருக்கும்’’ என்றார்.