தனியார் துறை வங்கிகளில் ஒன்றான பெடரல் வங்கிக்கு துபாயில் கிளை தொடங்க ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இந்தக் கிளையானது துபாய் இண்டர்நேஷனல் பைனான்சியல் மையத்தில் அமைய உள்ளது. இந்த அனுமதியின் மூலம் துபாயில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சிறப்பான சேவையை வங்கி அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 1,252 கிளைகள், 1,524 ஏடிஎம்களுடன் செயல்படும் பெடரல் வங்கி வெளிநாட்டில் தொடங்கும் முதலாவது கிளை இது என்பது குறிப்பிடத்தக்கது.