வணிகம்

2018-ம் நிதி ஆண்டு வளர்ச்சி 5.8% ஆம்பிட் கேபிடல் கணிப்பு

செய்திப்பிரிவு

பணப்புழக்க பிரச்சினை காரணமாக குறுகிய காலத்தில் பொருளாதார தேக்க நிலை இருக்கும் என்றும், அடுத்த நிதி ஆண்டு (2017-18) வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் எனவும் ஆம்பிட் கேபிடல் தெரிவித்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி விகிதம் 6.4 சதவீதமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் 0.5 சதவீதம் குறைந்து 5.9 சதவீத மாக இருக்கும். வரும் 2019-ம் ஆண் டில்தான் முறைப்படுத்தப்படாத துறை சீரடையும். அதனால் 2018-ம் நிதி ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும். (முன்பு 7.3 சதவீத வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.)

ரியல் எஸ்டேட், முறைசாரா கடன், கட்டுமானம் சார்ந்த இதர தொழில்கள் உள்ளிட்ட ரொக்கப் பணம் சம்பந்தப்பட்ட தொழில்கள் குறுகிய காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும். இந்த சிக்கல் அடுத்த சில வருடங்களுக்கு நீடிக்கும். அதே சமயத்தில் இந்த துறையில் இருக்கும் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் ஆதாயம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல பங்குச்சந்தை யிலும் ஏற்றம் இருக்காது. வரும் மார்ச் மாத இறுதியில் சென்செக்ஸ் 29500 புள்ளியிலும், 2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 29000 புள்ளியிலும் சென்செக்ஸ் இருக்கும்.

SCROLL FOR NEXT