வணிகம்

ஃபோர்ட் பியஸ்டா அறிமுகம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட், இப்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்ட ஃபியஸ்டா காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் இதன் விற்பனையக விலை ரூ. 9.29 லட்சமாகும்.

ஹோண்டா சிட்டி மற்றும் ஹுண்டாய் வெர்னா ஆகிய கார்களுக்குப் போட்டியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹோண்டா மற்றும் ஹூண்டாய் கார்களுக்கு ரூ. 67 ஆயிரம் முதல் ரூ. 1.70 லட்சம் வரை விலை வித்தியாசம் உள்ளது.

1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் கூடிய எரிபொருள் சிக்கனமான வாகனமாக இது வந்துள்ளது. ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டா னியம் ஆகிய மூன்று பெயர்களில் இது வெளிவந்துள்ளது. டீசலில் இயங்கக் கூடியது. ஹோண்டா சிட்டி காரின் விலை ரூ. 8.37 லட்சம் முதல் ரூ. 10.99 லட்சம் வரையாகும். ஹூண்டாய் வெர்னா டீசல் கார் விலை ரூ. 8.36 லட்சம் முதல் ரூ. 10.80 லட்சம் வரையாகும்.

2014 ஃபோர்ட் பியஸ்டா காரில் `ஹான்ட்ஸ் பிரீ இன் கார்’ எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது சாலையில் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதாக உள்ளது என்று நிறுவனத்தின் தலைவர் நிகெல் ஹாரிஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT