புதுடெல்லி: அரிசி உற்பத்தி மாநிலங்களான மேற்கு வங்கம், பிஹார், உ.பி. ஆகிய மாநிலங்களில் மழைப் பொழிவு குறைந்துள்ளது. அதனால் வரும் மாதங்களில் அரிசி உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவில் அரிசி உற்பத்தியில் காரீஃப் பருவம் 80 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்நிலையில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் நடப்பு ஆண்டு காரீஃப் பருவத்தில் 1.2 கோடி டன் அளவில் அரிசி உற்பத்தி குறையும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், உள்நாட்டு தேவை பாதிக்காமல் இருக்க அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரியை மத்திய அரசு விதித்துள்ளது. அதேபோல்,குருணை அரிசி ஏற்றுமதிக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.